Monday, February 14, 2011

காதலுக்காக

காதலனும் கவியும் :::
தினமும் காலை மலர்ந்து மாலை உதிரும் ரோஜாவாக நான் வேண்டாம்!!!!
என்றும் உதிரா காகித மலராகவாவது உன் கையில் நான் வேண்டும் .....

காதலனும் காதலியும்::::
காதலன்  காதலியுடன் கடற்க்கரை அலையில் கால்வைத்துக் கொண்டு இருந்தான் 
அப்போது காதலியின் கேள்வி??????

காதலி ///:::: நம் கால் தடத்தை இந்த கடல் அலை அழித்து விட்டது அது போல
நம் காதலும் அழிந்துவிடுமோ !!!!
காதலன்///:::::கடலுக்கும் காதலுக்கும் எப்போதும் பகை இல்லை ,
கடல் காதலர்களின் செல்ல பிள்ளை!!!
கடற்கரை இல்லை என்றால் இன்று பாதி காதலே இல்லை,,,
காதலியை போற்றாத காதலனும் இல்லை !!! 
கடலை போற்றாத கவிஞனும் இல்லை....
இன்று நம் கால் தடத்தை அழித்த இந்த கடலும் அலையும் தான்
நம் காதல் தடத்திற்கு ஒரு சாட்சி......

அலை அல்ல ஆண்டவனே வந்தாலும் நம் காதலை பிரிக்க முடியாது....
காதலர் தின வாழ்த்துக்கள்!!!!!!!!
                                                     நன்றி ....................
 

காதலிக்காக ஒருவன் உயிர் படையள் ;;;;;; /////
எனக்கு பிடிக்காததை உனக்கு பிடித்திருந்தாலும் பிடிக்காது என சொலும் பொய் அழகானது
அதில் இருக்கும் காதல் ஆழமானது ;;;
உனக்காக நான் என்ன தர போகிறேன்,,?? உன் உன்னத காதலுக்கு நான் நீ எது கேட்டாலும் தருகிறான் ஏன் உயிர் ஆனாலும் சரி,,
 பொய் சொல்கிறான் என சிரிக்கிறாய?? தைரியம் இருந்தால் கேள்,,,,
அடுத்த நொடி உன் பாதங்களுக்கு பாலிஷ் ஆவேன் ,,,,,,,,,,,,,,                                                   
    

Friday, February 11, 2011

தவிப்பும் சகிப்பும்

கிடைக்கும்வரை தவிப்பு  கிடைத்த பின் வரும் சகிப்பு!!!
                                                    விரும்பியது எல்லாம் கிடைக்க வில்லை என  வருத்தம் இருக்கும்!!
                                                    விரும்பிக்  கிடைத்தது எல்லாம் ஒரு 
மூலையில் வாடிக்கிடக்கும்.................

 முதல் முத்தம்!!!!!
                                  காதலி தந்த அந்த முத்தம் முதல் முத்தம் அது ஆயரம் அடி ஆழத்தில் முச்சடைத்து உயிருக்கு போராடி எடுத்து வந்த முத்தின் மதிப்பைவிட மேலனது...............
                                                   
                        

எனது படைப்புகள்  உங்களை  கவலை படுத்தினால் அதர்க்கு நான் வருந்துகிறேன்!!
 எனது முந்தய  படைப்புக்களை பார்த்து கோபம் கொண்ட சகோதிரிகளே இந்த
குழந்தையை மன்னியும்....










      

பெண்கள் பற்றி வஞ்சப் புகழ்ச்சி..





பெண்கள்..
எதிலும் புதுமை விரும்பிகள்..

உதாரணம் - சமையல் குறிப்பு
பாதிக்கப்படுவது – கையில் கிடைக்கும் விருந்தினர்.

*******************************************************

பெண்கள்..
எதிலும் பொலிவு காட்டுவர்..

உதாரணம் - அழகுக் குறிப்பு
பாதிக்கப்படுவது – கண்ணாடியும் கணவரும்.

Wednesday, February 9, 2011

நல் உள்ளங்களுக்கு நன்றி

என்னை அன்பாக ஏற்றுக்கொண்ட, ஏற்றுக்கொள்ளப்போகும் அனைவருக்கும் நன்றி!!!!
நன்றி என்பதற்கு ஒரு அர்த்தம் அல்ல.
இதற்கு ஆயிரம்  அர்த்தங்கள் உண்டு,,,,,
மீண்டும் ஒரு முறை  சொல்கிறேன். அன்பான வலை உலக மக்களுக்கு நன்றி ,,நன்றி... நன்றி...   
---------------- என் இதயம் சொன்ன வார்த்தைகள்
       

பெண்கள் மனம் பற்றி..

எதிர்பார்க்கும் பெண்ணின்   மனம்  
ஆண்களின் மனம் புரியாமல்  பேசும் ஒரு அழகிய  பிம்பம்!
ஆண்டவனையும் அது அந்தமானுக்கு  அனுப்பும்  சக்தி  உடையது!
குறைகளை மட்டும்  சொல்லும்  ஒரு குழந்தைத்தனம்  அது!
பிரிவை விரும்பா ஒரு பிள்ளை கனி அது!
சொல்வதை  ஏற்றுக்கொள்ளாமல் தான்சொல்வதுதான் சரி என  நிற்கும் ஒரு அரை நிறை குடம் அது!
அழகு இருக்கும் இடத்தில தான் ஆபத்து இருக்கும் என சொல்வார்கள். இது காதலில் விழுந்தவர்கள் மட்டும் அறிவர்!
மனம்  ஒரு குரங்கு என சொன்னவன் “பெண்ணின்“ என்ற வார்த்தையை மறந்து விட்டான்.  
பாவம். அதை சொல்வதில் கூட அவனுக்கு எவளவு  பயம்!! அதனால் தான் விட்டு விட்டான்,
நான் ஒன்றும் பெண்களின் எதிரி அல்ல. படிப்பவர்கள் மனம் எரிந்தால், அடுத்த முறை பெண்களின் புகழை  போற்றி எரிந்த  மனதில் பாலூற்றுகிறேன்,,,    

------------------- கொஞ்சம் வாய் அதிகம் பேசும் குழந்தை

Thursday, February 3, 2011

மழலையின் வேண்டுகோள்..


பிறந்துவிட்டேன் இந்த வலையுலகில்..
இவ்வளவு நாள் கருவறை இருட்டில் இருந்தேன்.
இந்த மழலைக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல
வாருங்கள்..
இந்த வலையுலக மக்கள்களே..
மா மேதைகளே..
கவிதை ஜாம்பாவான்களே..
இன்று நான் ஒரு குழந்தை..
உங்கள் அன்பாலும் வாழ்த்துக்களாலும் நான் வளர வேண்டும்
என்று கேட்டுக்கொள்கிறேன்.
கவிதை உலகின் மா மன்னர்களே..
கவியரசிகளே..
உங்களைப் போல் நானும் கவி படைக்க விரும்புகிறேன்.
உங்கள் கவிதை உலகிற்கு வந்த என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்.

இப்படிக்கு,
உங்கள் அன்பான
மழலை... (குவா.. குவா.. குவா..)